நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
சினிமா நடிகையான லாவண்யா தேவி 90-களில் மிகவும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகையாக வலம் வந்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைவருடனும் படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து அருவி தொடரில் லெஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 44 வயதாகிறது. இப்போதும் இளமை மாறாமல் இருக்கும் லாவண்யா தேவி திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயாக இருப்பார் என்றே ரசிகர்கள் கருதி வந்தனர்.
இந்நிலையில், அண்மையில் அவருக்கு பிரசன்னா என்பவருடன் திருமணம் முடிந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் பரவ பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். லாவண்யா தேவிக்கும் பிரசன்னா என்பவருக்கும் திருப்பதியில் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது. இதில், அருவி தொடரில் நடித்துவரும் நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். லாவண்யாவின் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சக நடிகரான ஈஸ்வர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் லாவண்யா தேவிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.