ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
பாக்கியலெட்சுமி தொடரில் டைட்டில் ரோலில் நடித்து வரும் சுசித்ரா, சின்னத்திரை நடிகைகளில் தனியொரு இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்து வரும் பாக்கியலெட்சுமி கதாபாத்திரத்தின் வழியே தமிழகத்தில் பல குடும்ப பெண்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார். திறமைக்கு வயது தடையில்லை என்னும் வகையில் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சுசித்ரா, இளம் நடிகைகளுக்கு போட்டியாக நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள தசரா படத்தின் மைனரு வேட்டிக்கட்டி பாடலுக்கு ரித்திகாவுடன் சேர்ந்து சூப்பராக குத்தாட்டம் போட்டுள்ளார். அதில், ரித்திகாவை விடவும் அருமையாக நடனமாடுகிறார் என சுசித்ராவை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.