எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை |
முன்னணி தொலைக்காட்சி தொடர் நடிகை சம்யுக்தா. 'சிப்பிக்குள் முத்து' சீரியலில் நடித்தபோது உடன் நடித்த விஷ்ணுகாந்தை, காதலித்து திருமணம் கொண்டார். திருமணம் ஆன ஓரிரு மாதத்தில், இருவரும் பிரிந்தனர். ஒருவர் மீது மற்றொருவர் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். தற்போது இவர்கள் சண்டை முடிவுக்கு வந்து இருவரும் தனித்தனி சீரியல்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சம்யுக்கா புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த காருக்கு கோயிலில் பூஜை செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சம்யுக்தா அதனுடன் எழுதியிருப்பதாவது:
சுதந்திரமாக கடுமையாக உழைக்கும் பெண்ணால் முடியாதது எதுவுமில்லை. ஒரு பெண் இந்த சமூகத்தில் உண்மையான இதயத்துடனும் தூய்மையான நோக்கத்துடனும் வாழ்வது மிகவும் சவாலானது. நாம் என்ன செய்தாலும் நிச்சயம் சிலர் நம்மை அவதூறாகப் பேசுவார்கள். அவர்களின் கேவலமான பேச்சுக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாய்கள் குரைக்கட்டும். யாரிடமும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் எவ்வளவு அழுக்கான இதயம் என்று அவர்களுக்கே தெரியும்.
உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள் மற்றும் உங்கள் சுயத்தை நம்புங்கள். உங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்குங்கள். உங்களை முன்னுரிமையாக்குங்கள். அந்த ஆண் பேரினவாத கேடுகெட்டவர்களுக்கு முன்னால் ஒரு முதலாளித்துவம் கொண்ட பெண்ணாக இருங்கள். அவர்கள் தவறானவர்கள் என்று நிரூபியுங்கள். உங்கள் வெற்றி அவர்களுக்கு செருப்படியாக இருக்கட்டும். தைரியமாக இருங்கள், வலுவாக இருங்கள் மற்றும் உங்கள் சாதனைகள் பேசப்படும் என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை அவர் விஷ்ணுகாந்தை மனதில் வைத்தே வெளியிட்டிருப்பதாக நெட்டிசன்கள் இதனை வைரலாக்கி வருகிறார்கள்.