கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
சென்னை 28 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான விஜயலெட்சுமி தொடர்ந்து சில படங்களில் நடித்து சின்னத்திரை பக்கம் வந்தார். நாயகி, டும் டும் டும் உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். அதன்பின் ஜீ தமிழ் சேனலில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்துடன் 1 கோடி ரூபாய் வென்றார். தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் விஜயலெட்சுமி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் 'நடிகர்கள் எதை சொன்னாலும் நடிகைகள் செய்ய வேண்டும். எல்லா இடங்களிலும் அப்படியில்லை. ஆனால், பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது. ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால் அவர் படுக்கைக்கு வருவார் என அவர்களே எண்ணிக் கொள்கிறார்கள். என்னிடமும் அட்ஜெஸ்மெண்ட் கேட்டார்கள். ஆனால், நான் ஏற்கவில்லை' என்று தனக்கு சினிமாவில் நடந்த அட்ஜெஸ்மெண்ட் சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.