துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த தொடர் ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்டாலின், சுஜாதா, குமரன் தங்கராஜன், சரவணன் விக்ரமன், தீபிகா என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வந்த இந்த தொடரில் சரவண விக்ரமன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துவிட்டார். பிக்பாஸ் ஆரம்பித்த நாள் முதலே இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் படுபயங்கரமாக இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அநேகமாக இந்தவாரம் அல்லது அடுத்தவாரத்திற்குள் சீரியல் நிறைவடையும் என தெரிகிறது.