தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மெட்டி ஒலி தொடரின் மூலம் அறிமுகமானவர் கிருத்திகா. அதன்பிறகு பல தொடர்களில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றார். தற்போது பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார். உறவினரான அருண் என்பவரை பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதையும், தனது மகனை தத்து கொடுத்து விட்டதாகவும் தற்போது அவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
திருமணம் ஆனதில் இருந்தே பல விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துப் போகாமல் இருந்தது. விவாகரத்து முடிவை நான் உடனே எடுக்கவில்லை. ஆரம்பம் முதலே பிரச்னைகள் வந்து கொண்டிருந்தன. இதனையடுத்து எல்லோரும் பேசி இந்த முடிவிற்கு வந்தோம். அந்த சமயத்தில் எனக்கு ஒரே கவலை, என்னுடைய மகன் பின்னாளில் யாராவது தந்தை பற்றி கேட்கும் போது, சங்கடப்படுவானோ என்று நினைத்தேன். ஆனால், என்னுடைய அண்ணன் இவனுக்கு அப்பாவாக இருந்து வழி நடத்துகிறான். ஆகையால், நமக்கு அப்பா இல்லையே என்று வருத்தப்படும் அளவிற்கு எதுவும் நடக்க வாய்ப்பில்லை. காரணம், அண்ணனுக்கு குழந்தைகள் பிறக்கும் முன்னரே இவன் பிறந்து விட்டான்.
இவன் ரோகிணி நட்சத்திரம் என்பதால் இவன் அப்பா, அம்மாவுடன் இருக்க மாட்டான். தத்துக் கொடுக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தது. அந்த வகையில், என் அண்ணனுக்கு நான் இவனை தத்துக்கொடுத்து இருக்கிறேன். நான் தவறான முடிவு எடுக்க வில்லை என்று நினைக்கிறேன்.
கடினமான காலத்தை கடந்து வர எனக்கு குடும்பம்தான் உதவியது. எனக்கு அப்படி வாழ கொடுப்பினை இல்லையே என்று நான் வருத்தப்பட்டது கிடையாது. அதை நான் ஏற்றுக்கொண்டேன். என்னுடைய அம்மாவிற்கு நான் இரண்டாவதாக கல்யாணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நான் யோசிக்கவில்லை. எனக்கு துணையாக என் மகனும், குடும்பமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.