துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் சில படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல் நடிகை மஹாலெட்சுமியை திருமணம் செய்ததால் சில நாட்கள் சோஷியல் மீடியாவில் இருவரும் டிரெண்டிங் ஜோடியாக இடம் பிடித்து வந்தனர். தொடர்ந்து பணமோசடி வழக்கில் கைதாகி சர்ச்சையில் சிக்கி அண்மையில் தான் வெளிவந்தார்.
இந்நிலையில், சிறையிலிருந்து வெளிவந்த ரவீந்தர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து கொண்டிருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது. இதனையடுத்து ரவீந்தர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்ட ரவீந்தரை ரசிகர்கள் உடம்பை கவனிக்க சொல்லி அட்வைஸ் செய்து வருகின்றனர்.