மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சின்னத்திரை நடிகை பாவ்னி ரெட்டி முதல் கணவரை இழந்த சோகத்திலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டு அதன்பின் புது வாழ்வை தொடங்கியிருக்கிறார். பிக்பாஸ் ஹவுஸ்மேட்டான அமீரின் காதலை ஏற்றுக்கொண்ட பாவ்னி அவருடன் தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், 'எனக்கு ஒருவரை பிடித்துவிட்டது என்றால் அவர்களுக்காக எதையும் செய்யக்கூடியவள். அவர்கள் மட்டும் தான் என்னுடைய உலகம் என்று வாழ்ந்து கொண்டிருப்பேன். அப்படிப்பட்டவர்கள் என்னுடைய வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டால் நான் எவ்வளவு வேதனை பட்டிருப்பேன். ஆனால், சிலர் அதை அசால்ட்டாக கேவலப்படுத்தி கமெண்ட் போடுகிறார்கள். நானே என் கணவரை கொன்றுவிட்டதாக சொல்கிறார்கள். அதுபோல இப்போது அமீரை எப்போது கொல்ல போகிறாய்? என்று கேட்கிறார்கள்' என வேதனையுடன் பேசியுள்ளார்.