மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5 அண்மையில் அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் குக்குகளாகவும், கோமாளிகளாகவும் பல புதிய முகங்கள் அறிமுகமாகியுள்ளனர். குக் வித் கோமாளியில் கலந்து கொள்ளும் பலருக்கும் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைப்பதால் சின்னத்திரை நடிகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ஜீ தமிழில் இரட்டை ரோஜா, இந்திரா தொடர்களில் ஹீரோவாக நடித்த அக்ஷய் கமல், மாரி தொடரில் நடித்து வரும் நடிகை ஷப்னம் ஆகியோர் விஜய் டிவிக்கு தாவியுள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக இவர்கள் இருவரும் ஜீ தமிழ் சீரியலை விட்டு விலகுவார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. எனினும் சீரியலை விட்டு விலகுவது குறித்து அக்ஷய் கமல் எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.