துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
'திருமதி செல்வம்' தொடரில் பூங்காவனம் கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்ற ஜெயமணி, தற்போது 'மலேசியா மாமா' என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். சிறகடிக்க ஆசை தொடரில் இவர் நடித்து வரும் மலேசியா மாமா கதாபாத்திரம், பூங்காவனம் கதாபாத்திரம் போலவே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனது திரையுலக அனுபவங்கள் குறித்து அண்மையில் பகிர்ந்துள்ள ஜெயமணி, ''எனக்கு 7 வயதில் இருந்தே சினிமா கனவு இருந்தது. மாமா பாடகர் என்பதால் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. காலேஜ் படிப்பை முடித்ததும் குடும்ப சூழல் சரியில்லாத காரணத்தால் வேலைக்குச் சென்றேன். நான் இன்னும் நினைத்ததை சாதிக்கவில்லை. திருமதி செல்வம் தொடரில் நான் அவருடைய சாய்ஸ் இல்லை என்று இயக்குனர் ஓப்பனாக சொல்லிவிட்டார்.
நான் 40 சீரியல்களுக்கு மேல் இயக்குனராக வேலை பார்த்துள்ளேன். எனவே, அந்த இயக்குனரின் தேவை எனக்கு புரிந்தது. எனது முழு முயற்சியையும் போட்டேன். மக்கள் மனதில் பதிய வேண்டும் என்று முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து நடித்தேன். இப்போது ரசிகர்கள் என்னை மலேசியா மாமா என்று அழைக்கிறார்கள். என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் உள்ளது. விரைவில் படமாக வெளிவரும்' என்று அந்த பேட்டியில் ஜெயமணி கூறியுள்ளார்.