துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சின்னத்திரை பிரபலமான அனிதா சம்பத் பிரபல ஆன்லைன் ஸ்டோரான அமேசான் கம்பெனி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நான் ஸ்டோரேஜ் பாக்ஸ் வாங்க வேண்டும் என அமேசானில் ஆர்டர் போட்டேன். கடந்த ஜூன் 13 ஆம் தேதி எனக்கு டெலிவரியும் ஆகிவிட்டது. அதன்விலை 899 ரூபாய். நான் கொஞ்சம் பிசியாக இருந்ததால் பார்சலை இத்தனை நாட்களாக பிரிக்கவில்லை. இப்போது திறந்து பார்த்தால் நான் ஆர்டர் செய்த பாக்ஸிற்கு பதிலாக பழைய அழுக்கான ரேஷன் புடவையை விட மோசமான ஒரு புடவையை அனுப்பி வைத்துள்ளார்கள். பார்சலை லேட்டாக பிரித்ததால் ரிட்டர்ன் செய்ய வேண்டிய நாளும் கடந்துவிட்டது. இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதற்கு அமேசான் நிறுவனம் தான் பதில் சொல்ல வேண்டும்' என வேதனையோடு பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பலரும் அமேசான் வலைத்தளத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள்.