'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் வேறெந்த தொடராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாத சாதனை ராமாணயம் தொடர்ந்து படைத்து வருகிறது. ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான இந்த தொடர், 1987ம் ஆண்டில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் ஒளிபரப்பானது.
ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த தொடரை பார்ப்பதற்காக மக்கள் வாரம் முழுக்க காத்து கிடந்ததும், கிராமங்களில் மரத்தடியில், பஞ்சாயத்து ஆபீசில் வைக்கப்பட்டிருந்த சின்னஞ்சிறு தொலைக்காட்சி பெட்டியில் நூற்றுக்கணக்கான மக்களும் இமை கொட்டாமல் பார்த்தது வரலாறு.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது தூர்தர்ஷன் ராமாணயத்தை 33 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஒளிபரப்பு செய்தது. அப்போதும் கோடிக் கணக்கான மக்கள் கண்டு ரசித்தார்கள். இப்போது உலகிலேயே அதிக மக்களால் பார்க்கப்பட்ட முதல் தொடர் என்ற சாதனையை ராமாயணம் படைத்துள்ளது. இதனை தூர்தர்ஷன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருக்கிறது.
இந்நிலையில் இத்தொடர் கலர்ஸ் இந்தி தொலைகாட்சியில் நேற்று முன்தினம் (மே 06) முதல் மீண்டும் ஒளிபரப்பாகிறது. விரைவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் என்கிறார்கள்.