நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு 250 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் தொடர் பூவே உனக்காக. இந்த தொடரின் நாயகியாக நடித்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிகா தொடரில் இருந்து தீடீரென விலகினார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹீரோவாக கதிர் என்ற கேரக்டரில் நடித்து வந்த அருண் விலகினார்.
இருவருமே விலகலுக்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் வருத்தத்துடன் விலகுவதாக சொன்னார்கள். விரைவில் புதிய தகவலுடன் சந்திப்போம் என்று சொன்னார்கள்.
இந்த நிலையில் தற்போது பூவே உனக்காக தொடரில் அருண் நடித்து வந்த கதிர் கேரக்டரில் அஸீம் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள எபிசோட்கள் இப்போது ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.
மியூசிக் சேனல் தொகுப்பாளராக சின்னத்திரைக்குள் வந்தவர் அஸீம். அதன்பிறகு சீரியல் நடிகராகி பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். தற்போது பூவே உனக்காக தொடரில் நாயகன் ஆகியிருக்கிறார். இந்த தொடரில் இருந்து மேலும் சிலர் விலக இருப்பதாகவும், அவர்களுக்கு பதிலாக நடிக்க வேண்டிய நடிகர்கள் தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.