மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ |
சினிமாவை தாண்டிய நிகழ்ச்சிகளுக்கு புகழ்பெற்றது விஜய் தொலைக்காட்சி. இந்த சேனல் ஆரம்பித்த நிகழ்ச்சிகளைத்தான் மற்ற சேனல்கள் காப்பி அடித்து வேறு வேறு பெயர்களில் ஒளிபரப்புகிறது. அந்த வரிசையில் ஒரு சாதாரண சமையல் நிகழ்ச்சியை நம்பர் ஒண் எண்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சியாக மாற்றி வெற்றி கண்டது இந்த சேனல்.
குக் வித் கோமாளியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார், உமா ரியாஸ், ரேகா, பாலாஜி, ரம்யா பாண்டியன் உட்பட பலர் போட்டியாளர்களாக இருந்தனர். இவர்களுடன் கோமாளிகளாக புகழ், பாலா,மணிமேகலை, ஷிவாங்கி இருந்தனர். தாமு மற்றும் வெங்கடேஷன் செப்பாக இருந்தார்கள்.
தொடர்ந்து 2வது சீசன் ஒளிபரப்பானது. இதில், ஷகிலா, தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, பாபா பாஸ்கர், தீபா, மதுரை முத்து, அஸ்வின் என பலர் இடம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி மற்றும் அஸ்வின் கலாட்டா மிகவும் வைரலானது. சமீபத்தில் 2வது சீசன் நிறைவடைந்தது.
3வது சீசன் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பை முதல் இரண்டு சீசன்களும் ஏற்படுத்தி விட்டது. தற்போது மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பிசியாக இருக்கும் சேனல், அதற்கு பிறகு பிக் பாஸ் புதிய சீசனை தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் குக் வித் கோமாளி 3வது சீசனுக்கான பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.
இரண்டாவது சீசனில் மக்களின் கவனத்தை ஈர்த்த, புகழும், ஷிவாங்கியும் செப் தாமுவும் 3வது சீசனில் தொடர்வார்கள் என்று தெரிகிறது. மற்றவர்கள் புதியவர்களாக இருப்பார்கள். யாரும் எதிர்பாராத வகையில் ஒரு திரைப்பட நட்சத்திரமும் 3வது சீசனில் இணைகிறார். 3வது சீசன் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.