தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் தனது போட்டோ ஷூட்டில் நடந்த காமெடியான சம்பவம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகையான ஜனனி அசோக் குமார், நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் படு பிஸியாக நடிக்கும் இவர், மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் நடந்த ஒரு போட்டோ ஷூட்டுக்காக இவர் செய்த காரியம் தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. ஜனனி நடத்திய அந்த போட்டோ ஷூட்டில், ஹீல்ஸ் அணிந்து கொண்டு சுவர் மீது ஏறி போஸ் கொடுக்க முயற்சிக்கிறார். அப்போது பேலன்ஸ் கிடைக்காமல் தவறி விழப்போக நல்லவேளையாக போட்டோகிராபர் பிடித்துக் கொள்கிறார். இந்த நகைச்சுவையான சம்பவத்தை வடிவேலு வாய்ஸூடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த சிலர் "தலைகீழாக தான் குதிக்கப் போகிறேன்", "பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்" என காமெடியன்களின் பஞ்ச் டயலாக்கை பதிவிட்டு கலாய்த்துள்ளனர். ஜனனி இந்த கிண்டல்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் ஜாலியாக எடுத்துக் கொள்கிறார்.
ஒரு போட்டோவுக்காக இவ்வளவு அக்கப்போரா மேடம்?