துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் டிவி பிரபலமான ரீமா அசோக் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சின்னத்திரையில் தோன்றவுள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையின் கவர்ச்சி புயலாக வலம் வந்து ரசிகர்களின் மனதை கிறங்கடித்தவர் ரீமா அசோக். விஜய் டிவியின் களத்துமேடு, கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, றெக்கை கட்டி பறக்குது மனசு, சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும் விஜய் டிவியின் டான்ஸ் ஷோவான 'ஜோடி பன் அன்லிமிடெட்' என்ற நிகழ்ச்சியில் ராமருக்கு ஜோடியாக அசத்தலான ஆட்டம் போட்டார்.
இப்படி தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து, மகிழ்வித்து வந்த ரீமா திடீரென சில நாட்கள் காணாமல் போய்விட்டார். தற்போது அவர் மீண்டும் திரையில் தோன்றவுள்ள செய்தியை தனது ரசிகர்களுக்கு இண்ஸ்டா பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். 'ஷூட்டிங் தொடங்கியது' என சிம்பிளாக தனது அடுத்த ப்ராஜெக்ட் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். ஆனால், அவர் சின்னத்திரையில் எந்த சீரியலில் அல்லது நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என்ற தகவல் சஸ்பென்ஸாக வைத்துள்ளார். ரீமா மீண்டும் நடிக்க இருப்பதை தெரிந்து கொண்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.