பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு | விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய் | பிளாஷ் பேக் : இயக்கத்தில் தோற்ற யூகி சேது | பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் |

சின்னத்திரையில் தொடர்களை விட ரியாலிட்டி ஷோக்கள் தான் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் எல்லா சேனல்களும் விதவிதமான ஷோக்களை உருவாக்கி ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் நாளை(அக்., 10) முதல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது கலாட்டா ராணி நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொள்கிற வேடிக்கை, காமெடி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு 3 சுற்றுகளாக விதவிதமான போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுகிறவர்கள் கலாட்டா ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளை வெல்வார்கள். இந்த நிகழ்ச்சியை ஆதவன் மற்றும் ஜெயச்சந்திரன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள். நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பகல்12 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.