இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
விஜய் டிவி பிரபலங்களான வினோத் பாபு - சிந்து தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறக்கும் போகும் செய்தியை சமீபத்தில் இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் அவர்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படம் படத்தின் போஸ்டர் லுக்கில் இருப்பதால் ரசிகர்கள் அதை வியந்து பார்த்து வருகின்றனர்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான வினோத் பாபு, இன்று பல சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் பேவரைட் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வினோத்தும் அவரது காதல் மனைவி சிந்துவும் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டனர். இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று க்யூட் ஜோடியாக சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
வினோத் தற்போது கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி சிந்துவுடன் சேர்ந்து புதுமையான போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். படத்தின் போஸ்டர் லுக் போல் இருக்கும் அந்த புகைப்படத்தில் ப்ரெக்னெண்ட் என படத்தின் தலைப்பு போல் எழுதப்பட்டுள்ளது. சப்டைட்டிலில் பேஸ்ட் ஆன் ட்ரூ ஸ்டோரி எனவும் உள்ளது. கர்ப்பமான வயிற்றுடன் சிந்து ஸ்னேக்ஸை கொரித்து கொண்டிருக்க வினோத் புத்தகத்தை வைத்துக் கொண்டு அதை ஓரக்கண்ணால் பார்க்கிறார். பார்ப்பதற்கு விநோதமாகவும் புதுமையாகவும் இருக்கும் இந்த போட்டோஷூட்டை பார்த்து ரசிகர்களும் இது என்ன புதுப்படமா? ஃபர்ஸ்ட லுக்கா? என கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.