இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
கிராமிய பாடல்களால் மக்களை மகிழ்வித்து வந்த செந்தில் - ராஜலட்சுமி தம்பதியினரை ஊடக வெளிச்சத்தால் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது விஜய் டிவி. சூப்பர் சிங்கர் ஆறாவது சீசனில் கணவன் மனைவியாக செந்திலும் ராஜலட்சுமியும் போட்டியில் நுழைந்தனர். அதுவரை வெகுஜன ஊடகங்களில் அங்கீகரிக்கப்படாத அவர்களது நாட்டுப்புற மக்களிசை பாடல்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் மாபெரும் பணியை கச்சிதமாக செய்தது விஜய் டிவி. அதன் பிறகு ரியாலிட்டி ஷோக்கள், சினிமாவில் பின்னணி பாடும் வாய்ப்பு, விளம்பர படங்கள் என அடுத்தடுத்த வளர்ச்சி பாதையை நோக்கி சென்றனர் தம்பதிகள் இருவரும். அதிலும் செந்தில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி படம் ஒன்றிலும் நடித்து விட்டார்.
இந்நிலையில் தற்போது அடுத்தக்கட்டமாக செந்தில் - ராஜலட்சுமி இருவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியலில் நடித்து வருகின்றனர். இதயத்தை திருடாதே சூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் செந்தில் ராஜலட்சுமி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அதனை வியப்புடன் பார்க்கும் ரசிகர்கள் செந்தில் ராஜலட்சுமி தங்களது வாழ்த்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.