சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை, தனுஷ் நடித்து கொடி, பட்டாசு போன்ற படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். அதையடுத்து சூரி நடிப்பில் கருடன் என்ற படத்தை கடந்தாண்டு இயக்கியவர், தற்போது லெஜென்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதையடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் துரை செந்தில்குமார். இப்படத்தில் ஏற்கனவே அவர் இயக்கிய கருடன் படத்தில் நடித்த சசிகுமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஏஸ், டிரெய்ன் படங்களை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அதையடுத்து பூரி ஜெகந்நாத் இயக்கும் படத்தில் நடிப்பவர், அந்த படத்தை முடித்ததும் துரை செந்தில் குமார் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.