23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஷ், சயீப்அலிகான், கிருதி சனோன், சன்னிசிங் உள்பட பலர் நடித்து வரும் படம் ஆதி புருஷ். ராமாயணத்தை மையமாகக்கொண்ட கதையில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்திலும், கிருதி சனோன் சீதையாகவும், சயீப் அலிகான் ராவணன் வேடத்திலும் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் தனக்கான காட்சிகளில் ஏற்கனவே சயீப் அலிகான் நடித்து முடித்து விட்ட நிலையில் தற்போது கிருதி சனோனும் தனது காட்சிகளில் நடித்து முடித்து விட்டார். இதை அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதோடு, இந்த பயணம் இவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து விட்டது என்பதை நம்ப முடியவில்லை. நான் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிற இந்த சூப்பர் ஸ்பெசல் கேரக்டரை நான் விட்டு விட்டதால் என் இதயம் அதில் மூழ்குகிறது. இந்த அனுபவத்தை நான் மறக்க மாட்டேன். ஜானகியின் அன்பான இதயம்,அவளது பக்தியுள்ள ஆன்மா மற்றும் அவளது அசைக்க முடியாத வலிமை, எங்கோ எனக்குள் எப்போதும் இருக்கும் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கிருதி சனோம், ஆதி புருஷ் இயக்குனர் ஓம்ரவுத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில், உங்கள் பார்வை அசாதாரணமானது. உலகம் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது. ஆதி புருஷ் நான் எப்போது பெருமைப்படும் ஒரு படம் என்று தெரிவித்துள்ளார் கிருதி சனோன்.இப்படம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 11-ந்தேதி திரைக்கு வருகிறது.