ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இந்தியத் திரையுலகில் விளையாட்டை மையமாக வைத்து சமீப காலமாக பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கிரிக்கெட்டை மையாக வைத்து, முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோணியின் வாழ்க்கை வரலாற்றுப்படமான ஹிந்தியில் வெளிவந்த 'எம்எஸ் தோனி - தி அன்டோர்டு ஸ்டோரி' பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதற்கடுத்து சில படங்கள் வெளிவந்தாலும் அந்தப் படம் அளவிற்கு புகழ் பெறவில்லை. அடுத்து 83ம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை மையமாக வைத்து உருவாகியுள்ள '83' படம் இந்த மாதம் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அதற்கடுத்து ஷாகித் கபூர், மிருணாள் தாக்கூர், பங்கஜ் கபூர் மற்றும் பலர் நடித்துள்ள கிரிக்கெட்டை மையப்படுத்திய படமான 'ஜெர்சி' டிசம்பர் 31ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளிவந்து 48 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படம் தெலுங்கில் நானி நடித்து 2019ல் வெளிவந்த படத்தின் ஹிந்தி ரீமேக்.
பாலிவுட்டில் அடுத்தடுத்து கிரிக்கெட்டை மையப்படுத்திய இரண்டு படங்கள் வெளிவர உள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரலாம்.