தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் கடந்த கொரோனா முதல் அலை துவங்கிய சமயத்தில் இருந்தே பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்களுக்கு, தனது சொந்த செலவில் உதவிக்கரம் நீட்டி வருகிறார். ஊரடங்கில் தவித்த தொழிலாளர்களை தனித்தனி பேருந்துகளில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது, அந்த சமயத்தில் விவசாயிகள், மாணவர்கள் ஆகியோருக்கு வேண்டிய உதவிகளை செய்தது என ரியல் ஹீரோ ஆகவே மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்தநிலையில் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞர் ஒருவரை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து .அவரது உயிரை காப்பாற்றியுள்ளார் சோனு சூட்..
பஞ்சாப்பில் உள்ள மோகா என்கிற மாவட்டத்தில் ஒரு மேம்பாலத்தின் வழியாக சோனு சூட் தனது காரில் சென்றுகொண்டு இருந்தபோது அந்த பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளான காரை பார்த்தார். விபத்தில் சிக்கிய காருக்குள் தானே நுழைந்த சோனு சூட், ஸ்டியரிங்கின் மீது மயக்கமாகி கிடந்த இளைஞரை வெளியே தூக்கி வந்து தனது காரில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்து உடனடி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
உரிய நேரத்தில் சோனு சூட் செய்த உதவியால் அந்த இளைஞரை காப்பாற்ற முடிந்தது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சோனு சூட்டின் இந்த மனிதாபிமானமிக்க செயல் சோஷியல் மீடியாவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.