வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி. தாடக் படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரி, குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள், ரோஹி படங்களில் நடித்தார். தற்போது தோஸ்த்தானா 2, குட்லக் ஜெர்ரி, மிலி, மிஸ்டர் அண்ட் மிசஸ் மாஹி படங்களில் நடித்து வருகிறார்.
ஜான்வி தினமும் காலையில் வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு அவர் உடற்பயிற்சி செய்தபோது தவறி விழுந்தார். விழும்போது கையை தரையில் ஊன்றியதால் கை எலும்பு முறிந்தது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதன் காரணமாக அவர் நடித்து வந்த மிஸ்டர் அண்ட் மிசஸ் படத்தின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.