பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
இந்தியத் திரையுலகில் நேரடி ஹிந்திப் படங்களின் டிரைலர்களுக்குப் போட்டியாக 'கேஜிஎப் 2' ஹிந்தி டிரைலர் மற்றுமொரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த டிரைலர் யு டியூபில் தற்போது 100 மில்லியன் சாதனையைக் கடந்துள்ளது.
ஹிந்தித் திரையுலகத்தில் இதுவரையில் “வார், பாகி, பாகுபலி 2, ஜீரோ, ஹவுஸ்புல் 4, தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான், சூர்யவன்ஷி, கபீர் சிங், டைகர் ஜிந்தா ஹை, சாஹோ” ஆகிய படங்களின் டிரைலர்கள்தான் 100 மில்லியன் சாதனையைக் கடந்துள்ளன.
அவற்றில் 'வார்' டிரைலர் இதுவரையிலும் 132 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. தெலுங்கிலிருந்து ஹிந்திக்குப் போன 'பாகுபலி 2' டிரைலர் 123 மில்லியன் பார்வைகளையும், 'சாஹோ' டிரைலர் 102 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.
'கேஜிஎப் 2' டிரைலர் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாக, 27 நாட்களில் இந்த 100 மில்லியன் சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஷாரூக்கான் நடித்த 'ஜீரோ' பட டிரைலர் 31 நாட்களில் 100 மில்லியன் சாதனையைப் படைத்திருந்தது. அந்த சாதனையை டப்பிங் படமான 'கேஜிஎப் 2' முறியடித்துள்ளது.
ஏற்கெனவே, 'கேஜிஎப் 2' டீசர் இந்திய அளவில் 257 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது.