தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய்குமார். அவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்று 100 கோடி வசூலைக் கடக்கும். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி வருகிறது. இது அக்ஷய்குமாருக்கும், அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
அக்ஷய்குமார் நடித்து கடைசியாக வெளிவந்த ஆறு படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. அந்தத் தோல்வியை ஆரம்பித்து வைத்த படம் 'லட்சுமி'. தமிழில் வெளிவந்த 'காஞ்சனா' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். இதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'பெல்பாட்டம், சூர்யவன்ஷி, அன்த்ராங்கி ரே (ஓடிடி), பச்சன் பாண்டே' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த 'சாம்ராட் பிருத்விராஜ்' படமும் இடம் பிடித்துள்ளது.
ஓடிடியில் வெளியான படம் தவிர மற்ற படங்கள் வியாபார ரீதியில் வசூலைத் தராமல் தோல்வியைத் தழுவிய படங்கள். இருப்பினும் அக்ஷய்குமார் தொடர்ந்து சில படங்களைத் தன் கைவசம் வைத்திருக்கிறார். அப்படங்கள் அவரை மீட்டெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தென்னிந்தியாவில் இருந்து ஹிந்திக்குச் சென்று வசூலைக் குவித்த 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்கள் பாலிவுட் ரசிகர்களின் கண்ணோட்டத்தை மாற்றிவிட்டதாக பாலிவுட்டினர் யோசிக்கிறார்களாம்.




