தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கல்லி பாய் உள்ளிட்ட வெற்றிப் படங்களின் நாயகன் ரன்வீர்சிங். சமீபத்தில் தனது நிர்வாண படங்களை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 292 (ஆபாசமான புத்தகங்கள் விற்பனை போன்றவை), 293 (இளைஞர்களுக்கு ஆபாசமான பொருட்களை விற்பனை செய்தல்), 509 (சொல், சைகை அல்லது செயல்மூலம் ஆபாசத்தை பரப்புதல்) போன்ற பிரிவுகளின் கீழ் சிங் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு ரன்வீர் சிங்கிற்கு செம்பூர் போலீசார் சம்மன் அனுப்பினர். இதை தொடர்ந்து ரன்வீர் சிங் தனது வழக்கறிஞருடன் போலீசில் ஆஜரானார். அவரிடம் காலை 7 மணி முதல் 9 மணி வரை ரகசிய விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலமும், எப்ஐஆரும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். கோர்ட் வழிகாட்டுதல்படி தேவைப்பட்டால் ரன்வீர் சிங் கைது செய்யப்படலாம். முதல்கட்ட விசாரணை முடிந்தாலும் தேவைப்டும் பட்சத்தில் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.




