இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
சமீபத்தில் வெளியான 'சீதாராமம்' திரைப்படத்தில் நடித்த மிருணாள் தாக்கூரின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. இப்படத்தில் சீதா மகாலட்சுமி என்ற இளவரசி கேரக்டரில் அவர் நடித்து பாராட்டை பெற்றார். இந்த நிலையில் பாலிவுட் நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி-யும் இளவரசி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் பொன்குமரன் இயக்கத்தில் உருவாகும் 'மஹால்' என்ற திரைப்படம் 500 ஆண்டுகளுக்கு முந்தைய கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்தில் இளவரசியாக டிகங்கனா சூர்யவன்ஷி நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பூஜை லால்பாக் அரண்மனையில் நடைபெற்றது. இந்த படத்தில் இளவரசியாக நடிப்பது தனது கனவு நனவானதாக உணர்கிறேன் என்று நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரண்மனையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தில் நடிகை வேதிகா வில்லியாக நடிக்க உள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.