படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படங்களை விட மற்ற ஹீரோக்களுடன் இணைந்து வில்லனாகவோ அல்லது இன்னொரு ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கே ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. அதனால் தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது தற்போது பாலிவுட்டில் இருந்தும் அவரை தேடி நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே இந்தியில் மூன்று படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி பிரபல இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள பார்சி என்கிற வெப்சீரிஸிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸில் இன்னொரு நாயகனாக பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 10ம் தேதி இந்த வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அதேசமயம் இந்த வெப் சீரிஸ் பிரமோஷன் நிகழ்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக துவங்கியுள்ள நிலையில் விஜய்சேதுபதிக்கே முக்கியத்துவம் தரப்படுவதாக கோபத்தில் இருக்கிறாராம் ஷாகித் கபூர். இதனால் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ள அவர் ஆர்வம் காட்ட மறுக்கிறார் என்றும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அதே சமயம் இதை மறுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் வெப் சீரிஸில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்துவதால் ஒவ்வொரு நடிகருக்குமே அவர்களுக்குரிய முக்கியத்துவம் தருவதில் உறுதியாக இருக்கிறோம். அப்படி ஷாகித் கபூருக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக துவங்கும்போது விஜய்சேதுபதியும் அவரும் இணைந்து பேட்டிகள் பல கொடுக்க இருக்கின்றனர். விஜய்சேதுபதியுடன் இணைந்து பேட்டி கொடுக்க வேண்டும் என்று கூட ஷாகித் கபூர் எங்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளார் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும்போது தான் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவரும்.




