துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. கடந்த 2021ஆம் ஆண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்றை உருவாக்க இருப்பதாக கங்குலி அறிவித்திருந்தார். அப்போது கங்குலியாக நடிக்க அவர் ரன்பீர் கபூரை பரிசீலனை செய்தார். ஆனால், அதற்கான பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. மீண்டும் கங்குலியின் பயோபிக் படத்தை தூசி தட்டி பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிப்பதாகவும், ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் கங்குலியாக நடிக்க விக்கி டோனர், ஆர்டிகள் 15, பதாய் ஹோ போன்ற படங்களில் நடித்த ஆயுஷ்மான் குராணா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் கங்குலியின் பள்ளி கால கட்டத்தில் துவங்கி கிரிக்கெட்டில் அவர் சாதித்தது, பின்னர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் வைத்து உருவாகிறது என்கிறார்கள்.