சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பாலிவுட்டில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். பேட்ட படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்தவர் இவர்தான். இவரும் இவரது மனைவி ஆலியாவும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்குள் சொத்து குறித்த ஒரு வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் கூட இருவரும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சோஷியல் மீடியாவை பரபரபாக்கினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஹிந்தியில் துவங்கிய பிக்பாஸ் ஓடிடி சீசன்-2வில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் நவாசுதீனின் மனைவி ஆலியா. சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்த போட்டியில் சக போட்டியாளர் ஒருவருடன் அமர்ந்து ஆலியா பேசும்போது, இழந்த தனது அடையாளத்தை மீட்பதற்காகவே தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்துள்ளேன் என்று கூறியுள்ளார். நவாசுதீன் பற்றி கூறும்போது பல வருடங்களுக்கு முன் நவாசுதீனும் அவரது சகோதரரும் ஒரே வீட்டில் தங்கி இருந்தனர் என்றும் நவாசுதீனின் சகோதரர் தான் தனக்கு முதலில் பழக்கமானார் என்றும் அவர்களுடன் இணைந்து பேயிங் கெஸ்ட் ஆக தங்கி இருந்தபோது நவாசுதீன் சித்திக்கிடம் காதலில் விழுந்தேன் என்றும் கூறியுள்ளார்.
நவாசுதீன் சித்திக்கின் கண்கள் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியுள்ள அவர் 19 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவரிடம் இருந்து தற்போது பிரிந்து வாழ்வதாகவும் தங்களது விவாகரத்து வழக்கு தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தற்போது இத்தாலியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை காதலித்து வருவதாகவும் ஒரு புதிய தகவலையும் கூறியுள்ளார்.