சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் பான் இந்திய திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை கன்னட இயக்குனர் நந்தா கிஷோர் என்பவர் இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதேசமயம் மலையாள நடிகர், கன்னட இயக்குனர், ஹிந்தி தயாரிப்பாளர் என்றாலும் கூட இந்த படம் தெலுங்கில் தான் தயாராக இருக்கிறது. இந்த படத்திற்கு விருஷபா என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது..
இதில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் மேகா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூரின் மகள் ஷனாயா கபூர் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர், தான் இயக்க உள்ள படத்தில் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில் மோகன்லால் படம் மூலம் ஷனாயா கபூர் அறிமுகமாக இருப்பதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கரண் ஜோஹர், “மோகன்லால் படத்தில் இணைந்து நடிப்பதன் மூலம் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை நீ கற்றுக் கொள்ள முடியும்.. வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.