பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கத்தில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'ஜவான்'. இப்படம் பற்றிய வசூல் விவரங்களை படம் வெளியான அடுத்த நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது படத் தயாரிப்பு நிறுவனம்.
அவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி “சினிமா வரலாற்றில் அதிக மொத்த வசூலைக் குவித்த ஹிந்திப் படமாக உலக அளவில் 1143 கோடிய 59 லட்சம் வசூலித்துள்ளது. இந்தியா மொத்த வசூல் 757 கோடியே 62 லட்சம், வெளிநாடுகளில் 385 கோடியே 97 லட்சம்…. இந்தியா நிகர வசூல் 640 கோடியே 42 லட்சம், அதில் ஹிந்தி 580 கோடியே 9 லட்சம், மற்ற மொழிகளில் 60 கோடியே 33 லட்சம்,” என முழு விவரத்தையும் வெளியிட்டுள்ளார்கள்.
இதன்படி எடுத்துக் கொண்டால் இதற்கு முன்பு அதிக வசூலைக் குவித்து முதலிடத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் ஹிந்திப் படமான 'டங்கல்' பட வசூலை முறியடித்துள்ளது. இருப்பினும், 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்களுக்குப் பின்பே 'ஜவான்' வசூல் உள்ளது.




