பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் | படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! |

பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சத்தா திரைப்படத்தை தொடர்ந்து வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கடந்த பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற தாரே ஜமீன் பார் படத்தின் இரண்டாம் பாகமாக சித்தாரே ஜமீன் பார் என்கிற படத்தில் தான் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார் ஆமீர்கான். ஆனால் கொஞ்ச காலத்திற்கு அவர் நடிப்பை விட்டு ஒதுங்கி இருக்க முடிவு செய்துவிட்டார். காரணம் அவரது அம்மாவின் உடல்நிலை தான். அவரது அம்மா ஜீனத் ஹுசைன் கடந்த வருடம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு சென்னையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் தனது தாயை அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு சென்னைக்கே தனது இருப்பிடத்தை மாற்ற முடிவு செய்துள்ளார் ஆமீர்கான். இதற்காக சம்பந்தப்பட்ட அந்த மருத்துவமனைக்கு அருகிலேயே இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனது தாயின் உடல் நிலையை பராமரிக்க சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் ஓய்வு எடுக்கிறேன் என்று ஆமீர்கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




