படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தெலுங்கு திரை உலகை ஒரு பக்கம் தமனும் இன்னொரு பக்கம் தேவிஸ்ரீ பிரசாத்தும் தங்களது இசையால் மாறி மாறி ஆட்டுவித்து வருகின்றனர். அதிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடலும், ஊ அண்டாவா என்கிற பாடலும் ரசிகர்களின் தேசிய கீதம் போலவே மாறிவிட்டது. அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்திய அந்த பாடலுக்கு இசையமைத்தற்காக சமீபத்தில் ஜனாதிபதியின் கையால் தேசிய விருதும் பெற்றார் தேவிஸ்ரீ பிரசாத்.
அதற்கு பல்வேறு பிரபலங்களிடமிருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சல்மான் கானிடம் இருந்து தனக்கு கிடைத்த ஒரு எதிர்பாராத பாராட்டு குறித்து பகிர்ந்து கொண்டார் தேவிஸ்ரீ பிரசாத். சல்மான் கானுக்கும் தனக்கும் மிக நெருங்கிய நட்பு இருந்து வருகிறது என்று கூறிய தேவிஸ்ரீ பிரசாத், புஷ்பா படத்தில் சாமி சாமி பாடல் வெளியான ஓரிரு நாட்கள் கழித்து ஒரு நாள் நள்ளிரவில் சல்மான் கானிடம் இருந்து போன் வந்தது. மறுமுனையில் அவர் எதுவும் பேசாமல் சாமி சாமி பாடலை பாட ஆரம்பித்து விட்டார். அந்த அளவிற்கு அந்த பாடல் அவர் மனதை ஈர்த்துவிட்டது.
அதை பாராட்டும் விதமாகத்தான் அந்த நேரத்திலும் அவர் என்னை அழைத்து எதுவும் பேசாமல் அந்த பாடலை பாடியது. அந்த அளவிற்கு எப்போதுமே கடந்த வருடங்களில் சல்மான் கான் என்னை வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் என்னை உற்சாகப்படுத்த தவறியது இல்லை என்று கூறியுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.
இவர்கள் இருவரும் 2011ல் வெளியான ரெடி படத்தை தொடர்ந்து ஜெய்ஹோ, ராதே மற்றும் சமீபத்தில் இந்த வருட துவக்கத்தில் வெளியான கிஷிகா பாய் கிஷிகி ஜான் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




