தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சந்தீப் ரெட்டி வங்கா ஹிந்தியில் ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். டிச., 1ல் படம் வெளியாகி ஹிந்தி ரசிகர்களிடம் மட்டும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல்நாளில் 116 கோடி வசூலித்தது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் போஸ்டரில் சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழியுடன் ரன்பீர் கபூரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து ஒரு பேட்டியில் சந்தீப் ரெட்டி வங்கா கூறும்போது, “ரன்பீர் கபூரை இதுநாள் வரை பலரும் ஒரு சாக்லேட் பாயாக தான் பார்த்து வந்திருக்கிறார்கள். ஆனால் அவரது ராக் ஸ்டார் படத்தைப் பார்த்தபோது அவர் ஆக்ஷனுக்கும், வன்முறைக்கும் சரியான ஒரு நபர் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.
இந்த படத்தின் போஸ்டரை வெளியிடும்போது அதில் அவருக்கு சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை கொடுத்து வெளியிட வேண்டும் என நானும் தயாரிப்பாளர் தரப்பும் விரும்பினோம். ஆனால் ரன்பீர் கபூர் அப்படி போடுவதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆனாலும் வெறும் போஸ்டரில் மட்டும் தான் எங்கள் விருப்பத்திற்காக இப்படி செய்கிறோம் என்று அவரை சமாதானப்படுத்தி அந்த போஸ்டரை வெளியிட்டோம்” என்று கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் பாலிவுட் வரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதை இதன் மூலம் பார்க்க முடிகிறது.




