தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் நேற்று பான் இந்தியா படமாக வெளியான ஹிந்திப் படம் 'அனிமல்'. இப்படத்திற்கு ஹிந்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.116 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில் முதல் நாளிலேயே 100 கோடி வசூலைக் கடந்த 5வது படமாக 'அனிமல்' படம் அமைந்துள்ளது. 2023ம் ஆண்டைப் பொறுத்தவரையில் முதல் நாள் வசூலில் 148 கோடி வசூலித்து தமிழ்ப் படமான 'லியோ' முதலிடத்திலும், 140 கோடி வசூலித்து 'ஆதிபுருஷ்' 2வது இடத்திலும், 129 கோடி வசூலித்து 'ஜவான்' 3ம் இடத்திலும், 116 கோடி வசூலித்து 'அனிமல்' 4ம் இடத்திலும், 106 கோடி வசூலித்து 'பதான்' 5வது இடத்திலும் உள்ளது.
இதுவரையில் வெளியான படங்களில் 'ஆர்ஆர்ஆர்' படம் முதல் நாளில் 223 கோடி வசூலித்து முதலிடத்திலும், 'பாகுபலி 2' படம் 214 கோடி வசூலித்து இரண்டாமிடத்திலும், 'கேஜிஎப் 2' படம் 162 கோடி வசூலித்து மூன்றாமிடத்திலும் உள்ளது.
மொத்தமாகப் பார்த்தால் 'டாப் 5' படங்களில் முதல் நான்கு இடங்களை தென்னிந்தியப் படங்களே பிடித்துள்ளன.