மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மலையாளத்தில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால் நடிப்பில் உருவான மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. வித்தியாசமான கதைக்களங்களில் படங்களை இயக்கி வரும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆனால் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யத் தவறிவிட்டதாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இன்னும் சிலர் இந்த படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக இதே இயக்குனர் மம்முட்டியை வைத்து இயக்கிய நண்பகல் நேரத்தில் மயக்கம் என்கிற படம் வித்தியாசமாக இருந்தாலும் கூட அது ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியது. இப்படி இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தன் பாணிக்கு ஏற்றபடி முன்னணி ஹீரோக்களை வளைத்து, தான் விரும்பிய படங்களை மட்டுமே எடுக்கிறார் என்றும், ரசிகர்களை பற்றி அவர் கவலைப்படுவது இல்லை என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென்னிந்திய படங்களை பெரிதும் பாராட்டுகின்ற, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி போன்ற இயக்குனர்களின் படங்களை வானளாவ புகழ்கின்ற பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இந்த படத்திற்கு ஆதரவாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனுராக் காஷ்யப், எதிர்மறை விமர்சனங்களால் மலைக்கோட்டை வாலிபன் படத்தை வீழ்த்தி விட முடியாது. அதன் தரத்தை குறைத்து விட முடியாது. உண்மையிலேயே இந்த படம் புத்துணர்வு தருகின்ற ஒரு தனித்துவமான புதிய முயற்சி என்று பாராட்டியுள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் ஹிந்தி பதிப்பிற்கு மோகன்லாலுக்காக இவர் தான் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.