சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் அனிமல். 900 கோடி வசூல் சாதனை செய்த இந்த படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். இந்த படம் திரைக்கு வந்தபோது பெண்ணியவாதிகள் கடுமையாக விமர்சித்தார்கள். இப்படம் முழுக்க ஆணாதிக்கம் நிறைந்ததாக குற்றம் சாட்டினார்கள். அதேபோல் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத்தும் சமூக வலைதளத்தில் அனிமல் படத்தை விமர்சனம் செய்திருந்தார்.
அதையடுத்து அவருக்கு பதில் கொடுத்த இயக்குனர் சந்தீப் ரெட்டி, கங்கனா ஒரு சிறந்த நடிகை. அவரது குயின் படம் எனக்கு பிடிக்கும். எனது படங்களில் அவருக்கேற்ற கேரக்டர் இருந்தால் கண்டிப்பாக அவரை நடிக்க அழைப்பேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஒரு அதிர்ச்சி பதில் கொடுத்து இருக்கிறார் கங்கனா.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், ‛‛உங்கள் படத்தில் நடிக்க தயவுசெய்து என்னை அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் உங்களது ஆணாதிக்க கேரக்டர்கள் என்னால் பெண்ணியவாதியாக மாறிவிடுவார்கள். நீங்கள் ஹிட் படங்களாக கொடுத்து வருவதால் பாலிவுட்டுக்கு தேவை. ஆனால் உங்கள் படங்களில் நடிப்பதற்கு எனக்கு அழைப்பு விடுக்க வேண்டாம்'' என்று தெரிவித்திருக்கிறார் கங்கனா.