தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
பாலிவுட்டில் அக்சய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இருவரும் இணைந்து நடித்துள்ள 'படே மியான் சோட்டே மியான்' திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. டைகர் ஜிந்தகி படத்தை இயக்கிய அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ராணுவ பின்னணியில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் மலையாள நடிகர் பிரித்விராஜ். ஏற்கனவே ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் மூன்றிலுமே வில்லனாகத்தான் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இதன் டிரைலரில் வித்தியாசமான இரும்பு முகமூடி அணிந்த ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதே சமயம் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அக்சய் குமார், “படத்தின் ஹீரோக்களான எங்கள் இருவரை விட வில்லன் பிரித்விராஜூக்கு தான் பஞ்ச் வசனங்கள் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படம் வெளியாகும் போது அவரது வசனங்கள் தான் ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படும்” என்று பிரித்திவிராஜ் முன்னிலையிலேயே அவரை புகழ்ந்து தள்ளி விட்டார்.