தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் தமிழில் சாது, ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடித்து இங்குள்ள ரசிகர்களிடமும் பிரபலமானவர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு 2022ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் 2 படத்தில் பிரதமர் கதாபாத்திரத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.
தற்போது ஹிந்தியில் வெல்கம் டு தி ஜங்கிள் மற்றும் குட்சடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இருதினங்களுக்கு முன் ரவீணாவின் கார் இரவு சாலையில் சென்ற மூன்று பெண்களின் மீது மோதியதாகவும் இதில் காயமடைந்த பெண்கள் வண்டியை ஓட்டிய டிரைவர் மற்றும் அதன்பிறகு சமாதானப்படுத்த இறங்கிய ரவீணா டாண்டன் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் ஒரு கட்டத்தில் ரவீணாவை தாக்கவும் செய்தனர்.
இது குறித்து சில வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதில் ரவீணாவின் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சம்பவம் நடந்த மும்பை கார்ட்டர் ரோடு பகுதிக்கு பொறுப்பு வகிக்கும் டிசிபி ராஜ் திலக் ரோஷன் இது குறித்து கூறும்போது, “ரவீணாவின் கார் யார் மீதும் மோதவில்லை. அதனால் யாரும் காயமடையவும் இல்லை. ஓட்டுநர் காரை ரிவர்ஸ் எடுக்க முயன்ற போது பின்பக்கம் இருந்த பெண் தன்னை இடிப்பது போல் வந்ததால் கத்தி கூச்சலிட்டு டிரைவரை திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதை சமாதானப்படுத்த இறங்கிய ரவீணா டாண்டனையும் அவர்கள் தாக்கியதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இவர்கள் இருவர் தரப்பில் இருந்தும் எந்தவித புகாரும் எங்களுக்கு வரவில்லை. ரவீணாவின் கார் பெண்கள் மீது மோதி விட்டது என்கிற தவறான செய்தியை யாரும் பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.