தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
புதிய படங்களின் வெளியீடுகளில் தேசிய அளவில் முக்கியமான ஒரு தினம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15. இந்த வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்கள் வந்தன.
ஹிந்தியில், அக்ஷய்குமார் நடித்த 'கேல் கேல் மெய்ன்', ஜான்ஆபிரகாம் நடித்த 'வேதா', ராஜ்குமார் ராவ் நடித்த 'ஸ்த்ரீ 2' ஆகிய படங்களும், தமிழில் விக்ரம் நடித்த 'தங்கலான்', அருள்நிதி நடித்த 'டிமான்ட்டி காலனி 2', கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரகு தாத்தா' ஆகிய படங்களும், தெலுங்கில் ரவி தேஜா நடித்த 'மிஸ்டர் பச்சன்', ராம் பொத்தினேனி நடித்த 'டபுள் ஐ ஸ்மார்ட்', மலையாளத்தில் பாசில் ஜோசப் நடித்த 'நுணகுழி', சிஜு சன்னி, அமித் மோகன் நடித்த 'வாழ - பயோபிக் ஆப் எ பில்லியன் பாய்ஸ்', ரதீஷ் சுந்தர் நடித்த 'மாவோயிஸ்ட்' ஆகிய படங்களும் வெளிவந்தன.
அதிக வசூலைக் குவிக்கப் போட்டி போடும் படங்கள் என்றால் ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படங்களைச் சொல்லலாம். அவற்றில் நேற்றைய முதல் நாள் வசூலில் மற்ற படங்களைக் காட்டிலும் ஹிந்திப் படமான 'ஸ்திரீ 2' படம் இந்தியாவில் மட்டும் 76 கோடியே 50 லட்சம் வசூலித்துள்ளது.
இதுவரை வெளிவந்த ஹிந்தி உள்ளிட்ட இந்தியத் திரைப்படங்களில் இது முதல்நாள் வசூலில் வரலாற்று சாதனை என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.