துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பாலிவுட்டில் உள்ள உச்ச நடிகர்கள் தமிழ் சினிமா இயக்குனர்களுடன் பணியாற்ற அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாரூக்கான். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ‛சிக்கந்தர்' என்ற படத்தில் நடிக்கிறார். இவர்களுக்கு முன்பாகவே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‛கஜினி' படத்தில் அமீர் கான் நடித்தார்.
இந்நிலையில் ஆமீர் கான் அடுத்து தமிழில் முன்னனி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என பாலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன. டங்கல் படத்திற்கு பிறகு கடந்த 8 வருடங்களில் ஆமீர் கான் நடித்து வெளிவந்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.