பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் |
சில மாதங்களுக்கு முன்பு கன்னட நடிகை ரன்யா ராவ் என்பவர் தொடர்ந்து துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலமாக அடிக்கடி தங்கம் கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த வாகா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அது மட்டுமல்ல கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ் என்பவரின் வளர்ப்பு மகளும் கூட. அந்த துணிச்சலில் தான் இவர் இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிய வந்தது.. பலமுறை ஜாமினுக்கு விண்ணப்பித்தும் அவை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார் ரன்யா ராவ்.
இந்த நிலையில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம், நடிகை ரன்யா ராவ் தொடர்ந்து துபாயில் இருந்து சுமார் 127.3 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளார் என்று குறிப்பிட்டு அதற்காக அவருக்கு 102.55 கோடி அபராத தொகையாக விதித்துள்ளது. அபராத தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட தவறினால் ரன்யா ராவுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல இந்த தங்க கடத்தலில் ரன்யா ராவின் கூட்டாளிகளாக இணைந்து செயல்பட்ட குண்டூர் ராஜுவுக்கு 67.6 கிலோ தங்கம் கடத்தியதற்காக 62 கோடி அபராத தொகையும் சஹில் ஜெயின் என்பவருக்கு 63.61 கிலோ தங்கம் கடத்தியதற்காக 53 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.