மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

தான் நடித்துள்ள ஹிந்தி படமான 'தேரே இஷ்க் மே' படத்துக்கு ஹிந்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதால் ஊர், ஊராக சென்று படத்தை பிரபலப்படுத்துகிறார் தனுஷ். 3 நாளில் அந்த படம் ஹிந்தியில் மட்டும் 50.95 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் காசிக்கு சென்று பட புரமோஷனில் ஈடுபட்டார். நேற்று புனே சென்று ரசிகர்களை சந்தித்தார். அவருடன் ஹீரோயின் கீர்த்தி சனோன், இயக்குனர் ஆனந்த் எல். ராய் செல்கிறார்கள். ஆனால், இதுவரை தமிழகத்துக்கு மட்டும் அந்த படக்குழு வரவில்லை. தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பு இல்லை.
அதேபோல், கடந்த வாரம் வெளியான முனிஸ்காந்த் நடிக்கும் 'மிடில்கிளாஸ்' படக்குழுவினர் இப்போது படத்தை ஏதாவது ஒருவகையில் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஆனால், கவின் நடித்த 'மாஸ்க்' படக்குழுவினர் படம் குறித்து பேசுவதில்லை. மாஸ்க் படம் தியேட்டரில் பெரிதாக ஓடவில்லை. அதனால் அவர்கள் அப்செட் என தகவல்.
பாலகிருஷ்ணா நடித்த 'அகண்டா 2' படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், அந்த படக்குழுவினர் பல்வேறு ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இப்போது படத்தை வெற்றி பெற வைக்க படம் ரிலீஸ் ஆவதற்கு முன் ஒரு வாரமும், படம் ரிலீஸ் ஆனபின் ஒரு வாரமும் படத்தை பல்வேறு வகைகளில் புரமோட் செய்ய வேண்டியது உள்ளது. இதற்கு சில ஹீரோக்கள், ஹீரோயின் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். சிலர் ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு ஓடிவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.




