தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத்சிங், தெலுங்கில் செக் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் பிப்ரவரி 19ல் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் ஹிந்தியில் ஜான் ஆபிரகாமுடன் அட்டாக், அமிதாப்பச்சனுடன் மே டே, அஜய்தேவ் கான்-சித்தார்த் மல்ஹோத்ராவுடன் தேங்க் ஹாட், மற்றும் அர்ஜுன் கபூர் உடன் சர்தார் அண்ட் கிராண்ட்சன் என நான்கு படங்களில் நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படங்கள் திரைக்கு வருகின்றன.
இதையடுத்து தற்போது டாக்டர் ஜி என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ரகுல் பிரீத் சிங். அனுராக் காஷ்யப்பின் சகோதரி அனுபூத்தி காஷ்யப் இயக்கும் இப்படம், நகைச்சுவை கதையில் உருவாகிறது. ஆயுஷ்மான் குரானா நாயகனாக நடிக்கிறார். அந்த வகையில் தற்போது ஹிந்தியில் மட்டும் ரகுல் பிரீத் சிங்கின் கைவசம் ஐந்து படங்கள் உள்ளன.