தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் |

2021ஆம் வருடத்திற்கான, 93வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் உலகெங்கிலும் இருந்து கலந்துகொண்ட படங்கள் ஆன்லைன் மூலமாகவே திரையிடல் செய்யப்பட்டு விருதுக்குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் வரும் பி-28ஆம் தேதி நடைபெற இருந்த ஆஸ்கர் விருது விழா, கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால் ஏப்-25க்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஹிந்தியில் வித்யாபாலன் நடித்துள்ள நட்கட் என்கிற குறும்படம், அதிக வரவேற்பை பெற்று சிறந்த குறும்படம் என்கிற பிரிவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. பாலியல் சமத்துவம் பற்றி பேசியுள்ள இந்த குறும்படம் ஆஸ்கர் விருது தேர்வு குழுவினர் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளதாம்.