பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று |
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற வித்யாபாலன் ஹிந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். வித்யாபாலன் அளித்துள்ள பேட்டி வருமாறு:- 'ஆணாதிக்கம் எல்லா துறைகளிலும் இருக்கிறது. அது முதலில் குடும்பத்தில் இருந்துதான் வருகிறது. எங்கள் வீட்டிலும் அது இருந்தது. பெண்கள் உரிமையை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் நடைமுறையில் இல்லை. பெண்கள் சமையல் அறைக்கு உள்ளே தான் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் சமையல் செய்யத்தான் இருக்கிறார்கள் என்றும் சொல்வது சரியல்ல. அவர்களால் அதையும் மீறி சாதிக்க முடியும். நிறைய பெண்கள் சாதித்து நிரூபித்து விட்டனர்.
எனக்கு சமைக்க தெரியாது. சிறு வயதில் இருந்தே எனது அம்மா, ஒழுங்கா சமையலை கற்றுக்கொள் என்று சொல்வார்கள். நான் காதில் வாங்கிக்கவே மாட்டேன். அவசியமானால் நான் வேலைக்காரியை வைத்துக் கொள்வேன். இல்லையென்றால் சமையல் செய்ய தெரிந்தவரை திருமணம் செய்து கொள்வேன் என்பேன். எனக்கு பிடிக்காததை செய்ய சொல்லி என்னை வற்புறுத்தாதே என்று கறாராக சொல்லி விட்டேன்.இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.