தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை பொருத்தவரை, இந்தியாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகர் என பெயர் பெற்றுள்ள அளவிற்கு, கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக, கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும், அதிக அளவில் நிதி உதவியும் செய்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம் தான். அதுமட்டுமல்ல தற்போது ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள பாந்திப்பூரா மாவட்டத்திலுள்ள நீரு என்கிற பகுதிக்கு தனி ஹெலிகாப்டரில் சென்ற அக்ஷய் குமார் அந்த பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுடன் வாலிபால் மற்றும் நடனம் ஆடவும் செய்தார். அதுமட்டுமல்ல அந்த நீரு கிராம மக்களுடன் கலந்துரையாடல் நடத்திய அவர், அந்த கிராமத்தை சேர்ந்த பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும் அளித்துள்ளார். அக்ஷய் குமாரின் இந்த செயல் ராணுவ வீரர்களையும் காஷ்மீர் எல்லைப் பகுதி மக்களையும் ஒருசேர மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது




