திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
'ராஜா ராணி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என தொடர்ந்து 3 வெற்றிப் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார். அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஹிந்தி படத்தை இயக்க உள்ளார்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மற்றொரு நடிகையாக சான்யா மல்ஹோத்ரா என்பவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அமீர்கான் நடித்த 'தங்கல்' திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.